MARC காட்சி

Back
அய்யனார் கோயில்
245 : _ _ |a அய்யனார் கோயில் -
246 : _ _ |a அய்யனார் கோயில்
520 : _ _ |a மதுரை மாவட்டம், மதுரை மேற்குப் பகுதியில் நாகமலைப் புதுக்கோட்டை செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஊர் விராட்டிப்பத்து. இவ்வூர் பழமையான மக்கள் வாழ்விடப்பகுதியாகும். கால்நடை மேய்ச்சலையும், வேளாண்மையையும் முதன்மையாகக் கொண்ட விராட்டிப்பத்து நாட்டு வைத்தியத்திற்கு பெயர் பெற்ற ஊராகும். இவ்வூரின் கண்மாய்க் கரையின் அருகே அய்யனார் கோயில் அமைந்துள்ளது. விராட்டிப்பத்து அய்யனார் ஊரின் காவல் தெய்வமாகவும், பல இனத்தாருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறார்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், அய்யனார் வழிபாடு, ஐயனார், அய்யனார், அய்யன், அய்யனார் கோயில், விராட்டிபத்து, நாகமலை புதுக்கோட்டை, மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a அ.விஸ்வநாதன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a கண்மாய்க் கரையில் அமைந்த தலம். பல குடியினருக்கு குலதெய்வக் கோயில்.
914 : _ _ |a 9.9350021
915 : _ _ |a 78.0769537
923 : _ _ |a விராட்டிபத்து கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a விராட்டிபத்து அய்யனார் கோயில் மிகவும் சிறிய கட்டிட அமைப்பைப் பெற்று விளங்குகிறது. சிறிய கருவறையின் மையப்பகுதியில் அய்யனார் துணைவியருடன் வீற்றிருக்கிறார். கருவறையின் வெளியே இருபுறமும் நாகம்மாள், விநாயகர் வலதுபுறமும், கருப்பசாமியும், முருகனும் இடது புறமும் காட்டப்பட்டுள்ளனர். அய்யனாரின் வாகனமாக அமர்நிலையிலுள்ள நந்தி காட்டப்பட்டுள்ளது.
932 : _ _ |a விராட்டிப்பத்து என்பது பிராட்டிபற்று என்று பெயரின் மருவிய வழக்காகும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உரிய நிலங்கள் இங்கு அவர் பெயரால் பற்று வைக்கப்பட்டிருந்தன. எனவே இப்பகுதி பிராட்டி பற்று என்று பண்டு வழங்கியது. அவ்வழக்கு மருவி விராட்டிப்பத்து என தற்போது வழக்கத்தில் உள்ளது. விராட்டிப்பத்தில் உள்ள அய்யனார் கோயில் கட்டிட அமைப்பைப் பொறுத்தவரை எளிய வடிவாகும். சிறிய கருவறை, சிறிய மண்டபம் ஆகியவையே இக்கோயிலின் கட்டிட அமைப்புகளாகும். கருவறையில் அய்யனார் துணைவியருடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். மண்டபத்தில் பரிவாரத் தெய்வங்களும், வாகனமும் அமைக்கப்பட்டுள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a சமணமலை தமிழ்-பிராமிக் கல்வெட்டு, செட்டிபொடவு தீர்த்தங்கரர் சிற்பங்கள், சமணமலை கருப்பசாமி கோயில்
935 : _ _ |a மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து நாகமலை புதுக்கோட்டை செல்லும் பேருந்தில் சென்றால் விராட்டிபத்து ஊரில் இறங்கலாம்.
936 : _ _ |a காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை
937 : _ _ |a விராட்டிபத்து
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00403
barcode : TVA_TEM_00403
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00403/TVA_TEM_00403_மதுரை_விராட்டிப்பத்து_அய்யனார்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_00403/TVA_TEM_00403_மதுரை_விராட்டிப்பத்து_அய்யனார்-கோயில்-0001.jpg

TVA_TEM_00403/TVA_TEM_00403_மதுரை_விராட்டிப்பத்து_அய்யனார்-கோயில்-0002.jpg

TVA_TEM_00403/TVA_TEM_00403_மதுரை_விராட்டிப்பத்து_அய்யனார்-கோயில்-0003.jpg

TVA_TEM_00403/TVA_TEM_00403_மதுரை_விராட்டிப்பத்து_அய்யனார்-கோயில்-0004.jpg